தமிழ்10

Sunday, June 21, 2009

அப்பாவுக்கு...

அப்பாவுக்கு அன்பு மகனின் பதிவு . வாழ்க்கையில் அனைத்தையும் தாமதமாய் பெற்றவர் நீங்கள் . மனைவியிலிருந்து அன்பு மகன் நான் உட்பட .அதனாலேயே என்னவோ தங்களை பற்றி எல்லாமே நான் தாமதமாகவே அறிகிறேன் . மூன்று நாளுக்கு முந்தைய உங்களின் பிறந்த நாளைக்கூட .'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ' என்பது மாதிரியான அரசியல் வாசகத்தை உங்கள் முன் வைக்க விரும்பவில்லை . நீங்கள் வாழ்த்தவும் முடியாத வணங்கவும் முடியாத இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன் .
ஒரு தகப்பனாக என்னை தாங்கள் கண்டித்ததும் இல்லை , தோழனாக தோள் கொடுத்ததும் இல்லை . என் குறித்த உங்களது விமர்சனங்களை அம்மா வழியாகவே அறிந்தேன் . அதன் பொருட்டே உங்களை சராசரி அப்பாவின் இடத்தில் என்னால் இருத்த முடியவில்லை . அதே நேரம் உங்கள் கருத்துகளுடன் ஒருமித்து போகவும் முடியவில்லை . நீங்கள் சராசரி அப்பா இல்லைதான் , அதற்காக உங்கள் கனவை நான் காண முடியாது . உங்கள் வழியில் நான் பயணப்படவும் முடியாது . என்னுடைய இந்த கருத்திற்கு தாங்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும் .
இதை நான் உங்களிடம் நான் நேரில் கூறப் போவதுமில்லை , நீங்களும் இந்த பதிவை படித்து என்னிடம் வாதம் புரியப் போவதுமில்லை . ஒரு மகனாக உங்களிடம் கூற முடியாததை இங்கு பதிந்ததில் ஒரு சின்ன ஆசுவாசம் . ஒன்று மட்டும் உறுதி நான் என்றுமே உங்களுக்கு சராசரி மகனாக இருக்க மாட்டேன் .
தாமதிக்கப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துகள்
இப்படிக்கு
பாலா

3 comments:

  1. அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன விதம் அழகு. இதற்கும் அம்மாவைத் தூது விட்டிருக்கலாம் அல்லவா?

    ReplyDelete
  2. //அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன விதம் அழகு. இதற்கும் அம்மாவைத் தூது விட்டிருக்கலாம் அல்லவா?//

    நல்ல யோசனை . இது ஏன் என் புத்திக்கு உரைக்கவில்லை .

    ReplyDelete