தமிழ்10

Saturday, May 23, 2009

இவன்தான் பாலா

அடியேன் பாலா .பாலமுருகன் .பதிவுதளங்களின்பால் கொண்ட ஆர்வத்தால் எழுத துணிந்துள்ளேன். தமிழ் உலகிற்கு இவன் என்ன பெரிதாய் எழுதிவிட போகிறான் என்று நீங்கள் உங்கள் அருகிருக்கும் நண்பரின் காதில் கிசுகிசுக்கலாம்.பெரிதாய் இல்லை என்றாலும் நற்றமிழில் பார்த்ததையும் பழகியதையும் பாதித்ததையும் பதியவே விரும்புகிறேன் .என் பதிவுகளின்பால் ஏற்படும் உங்கள் உணர்ச்சிகள் அனைத்தையும் எழுத்துரு கொடுத்து எனக்கே திருப்பி விடுங்கள் .அது உங்கள் வசவோ வாழ்த்தோ எதுவாயினும் . பிழையெதுவும் கண்டால் சுட்டிக்காட்டி குட்டி விடுங்கள்.பெற்றுகொள்வேன்.
இப்படிக்கு
பாலா

3 comments:

  1. அறிமுகம் நன்றாகத்தான் இருக்கிறது. வசவுக்குப் பயப்படாதீர்கள். இது உங்கள் வலையம். நீங்கள் நினைப்பதை துணிந்து எழுதுங்கள்.
    என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பாலா, நீங்கள் பிறர் வலையங்களில் கருத்துப் போடுவது போலவே உங்கள் வலையத்துக்கும் போடுங்கள். புரிகிறதா? கருத்துப் போடும் சுட்டியை அமுக்கி கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  3. //பாலா, நீங்கள் பிறர் வலையங்களில் கருத்துப் போடுவது போலவே உங்கள் வலையத்துக்கும் போடுங்கள். புரிகிறதா? கருத்துப் போடும் சுட்டியை அமுக்கி கருத்தைப் பதிவு செய்யுங்கள்.//

    நன்றி

    ReplyDelete